சொத்து தகராறில் மோதல் அண்ணன் கவலைக்கிடம் தம்பி உள்பட 6 பேர் மீது வழக்கு

காட்டுமன்னார்கோவில், ஜன. 26: காட்டுமன்னார்கோவில் அடுத்த கீழக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன்கள் சவுந்தரபாண்டியன்(53), சரவணன்(39). சகோதரர்கள். அண்ணன், தம்பி இருவருக்கும் பூர்வீக சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சரவணன், அவரது மனைவி சுபா(33) மற்றும் உறவினர்களான ஐயப்பன்(27) மணி(26), சஞ்சய்(17), சக்திவேல்(16) ஆகிய 6 பேரும் சவுந்தரபாண்டியன் வீட்டிற்கு சென்று அவரை திட்டி இரும்பு கம்பி, கட்டையால் தாக்கினர். இதில் சவுந்தரபாண்டியன் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த அவரது மனைவி லட்சுமி(50), மகள் அனுஜா மற்றும் உறவினர்கள் குணசேகரன்(60), இவரின் மனைவி விஜயா(53) ஆகியோர் தட்டிக்கேட்டுள்ளனர். இதனையடுத்து அந்த கும்பல் அவர்களையும் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்தவர்கள் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சவுந்தரபாண்டின் தலையில் அடிப்பட்டு சுயநினைவை இழந்த நிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சவுந்தரபாண்டியனின் மகன் ராமச்சந்திரன்(24) அளித்த புகாரின்பேரில் காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் ஏழுமலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Related Stories: