ரயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கி சென்ற சிறப்பு ரயில் சேலம் வந்தபோது ரயில்வே போலீசாருடன் இணைந்து ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். முன்பதிவு பெட்டிகளில் பயணிகளின் உடமைகளை சல்லடை போட்டு சோதனை செய்தனர். அப்போது பெரிய டிராவல்ஸ் பேக்கில் சோதனையிட்ட போது, அதில் 12 கிலோ கஞ்சா பண்டல்களாக இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து  ரயில்வே போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை, போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: