ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை

குடியரசு தினத்தையொட்டி, முக்கிய ரயில்வே ஸ்டேஷன்கள், மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் ரயில்வே ஸ்டேஷனில் கடந்த 3 நாட்களாக தொடர் கண்காணிப்பில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும், தமிழக ரயில்வே போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே போலீஸ் டிஎஸ்பி குணசேகரன், இன்ஸ்பெக்டர் சிவகாமிராணி, ஆர்பிஎப் எஸ்ஐ கல்யாணகுமார் ஆகியோர் தலைமையில் நேற்றைய தினம், ஸ்டேஷன் முழுவதும் தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். இதில், பார்சல் பிரிவில் பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்க இருந்த பண்டல்களை மெட்டல் டிடெக்டர் கொண்டு பரிசோதித்தனர். அதேபோல், வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்கள், டூவீலர்களில் சோதனையிட்டனர். தொடர்ந்து, கோவை எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் பயணிகளின் உடமைகளை பரிசோதித்தனர்.

Related Stories: