பலத்த போலீஸ் பாதுகாப்பு

குடியரசு தினவிழாவை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சேலம் மாநகரில் போலீஸ் கமிஷனர் நஜ்முல் கோடா உத்தரவின் பேரில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா நடக்கும் காந்தி ஸ்டேடியம் முழுவதும், நேற்று போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, தீவிர சோதனை நடந்தது. மாநகர் முழுவதும் போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். இதேபோல், சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு, சேலம் வழியாக செல்லும் ரயில்களில் ஏறி, பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர். ரயில்வே தண்டவாளங்கள், பார்சல் பிரிவுகளிலும் சோதனை நடைபெற்றது.

Related Stories: