நாமக்கல் ஆர்டிஓ ஆபிசில் உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம்

நாமக்கல்: நாமக்கல் ஆர்டிஓ அலுவலகத்தில், உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதி மற்றும் ராசிபுரம் பகுதியில் பல்வேறு குறைபாடுகளுக்கு சிறை பிடிக்கப்பட்ட பலதரப்பட்ட வாகனங்கள் பல ஆண்டாக உரிமை கோரப்படாமல் இருக்கிறது. அந்த வாகனங்களை ஏலத்தில் விட உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் வாகனம் தொடர்பான ஆவணங்களை அலுவலகத்தில் காட்டி, வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம். வரும் 15 நாட்களுக்குள் உரிய அபராதம் செலுத்தி, வாகனங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உரிமை கோரப்படாத வாகனங்கள் என கருதி, அந்த வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படும். வாகனங்களில் விபரங்கள் அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இவ்வாறு வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.

Related Stories: