மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிப்பு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நேற்று மொழிப்போரில் உயிர் தியாகம் செய்த தியாகிகளின் படங்களுக்கு அஞ்சலி

செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான செங்குட்டுவன் தலைமை வகித்து, தியாகிகளின் படங்களுக்கும், மொழிப்போர் தியாகியும், கிருஷ்ணகிரி நகர்மன்ற முன்னாள் தலைவருமான மறைந்த வெங்கடாஜலம் படத்திற்கும், மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், மொழிப் போர் தியாகி தனபாலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் மதியழகன் எம்எல்ஏ, மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் நவாப், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், சுப்பிரமணி, குண.வசந்தரசு, நிர்வாகிகள் பாபு, கிருஷ்ணன், செந்தில், வேல்மணி, கடலரசுமூர்த்தி, ராஜா(எ)ஆரோக்கியசாமி, கனல் சுப்பிரமணி, ராஜசேகர், சீனிவாசன், வெங்கட்ராமன், ஜெயசீலன், மதன்குமார் மற்றும் சுரேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: