திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை பின்புறம் பயங்கர தீ விபத்து

திருவில்லிப்புத்தூர்: திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை அருகே உள்ள குப்பையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்று திருவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்.

திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் உழவர் சந்தை அருகே பிரேத பரிசோதனை அறை உள்ளது. இந்தப் பிரேத பரிசோதனை அறையின் பின்புறம் ஏராளமான குப்பைகள் குவிந்து இருந்தன. இந்த குப்பைகளில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென காற்றின் வேகத்திற்கு பெரிய அளவில் எரிந்ததால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திருவில்லிபுத்தூர் தீயணைப்பு துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணிசாமிக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் திருவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர். இதனால் அருகே இருந்த குடியிருப்பு பகுதிக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: