ரேஷன் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

தேனி:  தேனியில் உள்ள ரேஷன் கடைகளில் கலெக்டர் திடீரென சென்று ஆய்வு செய்தார். தேனி-அல்லிநகரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை  கூட்டுறவு கடன் சங்கம் மூலம் செயல்படும்  ரேஷன் கடைக்கு தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன் நேற்று திடீரென சென்று ஆய்வு  செய்தார். அப்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருள்களின் எடை சரியாக உள்ளதா எனவும், இருப்பு சரியாக உள்ளதா எனவும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, குடும்ப அட்டைதாரர்கள் சிலர் கைரேகை சரியாக பதிவாகாவிட்டால் நாளை வருமாறு அனுப்புகின்றனர். இதனால் வீண் அலைச்சல் ஏற்படுவதாக குற்றம் சாட்டினர். இதனைக்கேட்ட கலெக்டர்  ரேகை பதிவு செய்யும் இயந்திரம் சர்வர் பிரச்சனை காரணமாக கைரேகை பெறமுடியாவிட்டால், குடும்பஅட்டைதாரர்களிடம் கையெழுத்து பெற்று அத்தியாவசிய பொருள்களை விநியோகிக்க உத்தரவிட்டார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: