திமுக 12வது வட்ட கழகம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முட்டை, பிஸ்கட் வழங்கல்

திருப்பூர்:  திமுக தலைவரும்,  தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ ஆலோசனைபடி, திருப்பூர் வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராசன், 15.வேலம்பாளையம் பகுதி கழக பொறுப்பாளர் கொ.ராமதாஸ் ஆகியோர் வழிகாட்டுதலின்படி கொரானா தோற்று நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முட்டை, பிஸ்கட் வழங்கும் நிகழ்ச்சி 12 வது வட்ட திமுக 15.வேலம்பாளையம், அம்மையப்பன் நகரில் நடந்தது.  

நிகழ்ச்சிக்கு வடக்கு மாநகர பொறுப்புக்குழு உறுப்பினரும் 12வது வட்ட கழக பொறுப்பாளருமான சிட்டி வெங்கடாசலம் தலைமை தாங்கி  அம்மையப்பன் நகர் பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர், முட்டை, பிஸ்கட்டுகளை வழங்கினார். திருப்பூர் மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் உமாமகேஸ்வரி, வட்ட கழக பொறுப்புக்குழு உறுப்பினர் குழந்தைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்ட கழக பொறுப்புக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், நாகராஜ், சந்திரசேகர், பெருமாள், பாலசுப்பிரமணி, இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகுமார், துணை அமைப்பாளர் செளந்தர்ராஐன், செல்வம், ‘பந்தல்’முருகன், மேஸ்திரி கணேசன் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Related Stories: