கோவையில் கார், டூவீலர் பழுது பார்க்கும் தி டீட்டைலிங் மாபியா நிறுவனம் துவக்கம்

கோவை: கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் அனைத்து வகையான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான பழுது பார்க்கும் ‘தி டீட்டைலிங் மாபியா’ என்ற நிறுவனத்தை முன்னணி கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் அனைத்து வகையான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான பழுது பார்க்கும் ‘தி டீட்டைலிங் மாபியா’ என்ற நிறுவனத்தின் துவக்க விழா நேற்று நடந்தது. இதில், உலக கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் துவக்கி வைத்தார். நிறுவனத்தின் உரிமையாளர் சிவா நிருபர்களிடம் கூறுகையில், \”கோவையில் முதன்முறையாக இந்நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் வரிசையில் இதுவரை இது போன்ற 85 நிறுவனங்கள் உள்ளன. இருசக்கர வாகனங்கள், மாருதி முதல் ஆடி, பெராரி, பென்ஸ் போன்ற அனைத்து பல்வே வாகனங்களுக்கு தேவையான வாஷிங், பெயிண்டிங், டென்ட் மற்றும் டிங்கரிங் போன்ற பழுதுகளை நிறுவனத்தில் உள்ளதுபோலேவே மிக துல்லியமாக வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட இயந்திரங்களின் மூலமாகவும், உலக தரமிக்க பெயிண்ட் வகைகளை கொண்டு செய்து தருகிறோம். மிக குறைந்த விரைவில் தரமிக்க பணிகளை இங்கு வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளோம்\” என்றார்.

Related Stories: