சத்தியமங்கலம் அதிரடி படை சப்-இன்ஸ்பெக்டருக்கு மத்திய அரசின் பதக்கம்: ஈரோடு மாவட்ட காவல்துறையினர் உற்சாகம்

சத்தியமங்கலம்: ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை மற்றும் பணிக்கான பதக்கங்களை மாநில அரசு காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு குடியரசு தினவிழாவை முன்னிட்டு பதக்கம் பெறும் காவல்துறை அதிகாரிகளின் பட்டியல் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

 

இதில் தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் 18 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இதில் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சத்தியமங்கலம் தமிழ்நாடு சிறப்பு இலக்கு படை (அதிரடிப்படை) போலீஸ் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் சிவகணேசன் (45) என்பவரது பெயர் இடம்பெற்றுள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த இவர் 2002ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்து பயிற்சி முடித்தவுடன் சத்தியமங்கலம் தமிழ்நாடு சிறப்பு இலக்கு படையில் பணிபுரிந்து வருகிறார். வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட அதிரடி படையில் பணிபுரியும் சப் இன்ஸ்பெக்டருக்கு குடியரசு தினவிழாவை முன்னிட்டு சிறந்த சேவைக்கான மத்திய அரசு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட காவல்துறையினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: