ஈரோட்டில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள், போலீசாருக்கு குடியரசு தின பதக்கம்

ஈரோடு: நாடு முழுவதும் குடியரசு தினம் இன்று (26ம்  தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதில், ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில்  வ.உ.சி.மைதானத்தில் இன்று காலை 8.05 மணிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி  தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த உள்ளார்.  இதைத்தொடர்ந்து  மாவட்ட காவல் துறையில் 20 ஆண்டுகள் எவ்வித புகாருக்கும் ஆளாகாமல் சிறப்பாக  பணியாற்றிய 55 போலீசாருக்கு தமிழக முதல்வரின் பதக்கமும், சான்றிதழையும்  கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மற்றும் எஸ்பி சசி மோகன் ஆகியோர் வழங்க உள்ளனர்.  

இதைத்தொடர்ந்து அனைத்து அரசு துறைகளிலும் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள்,  ஊழியர்கள், போலீசார் என 159 பேரை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பாராட்டி  நற்சான்றிதழும், பதக்கமும் வழங்க உள்ளார். பதக்கம் மற்றும் சான்றிதழ்  பெறும் அனைவருக்கும் இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு, குடியரசு தினவிழா  நிகழ்ச்சியில் துறை ரீதியான உத்தரவுப்படி பங்கேற்று பதக்கம், சான்றிதழ் பெற  அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: