மாமல்லபுரத்தில் முதலாம் நரசிம்ம வர்ம பல்லவர் ஜெயந்தி விழா

மாமல்லபுரம்: முதலாம் நரசிம்ம வர்மன் புகழ் பெற்ற பல்லவ மன்னர், தலைசிறந்த மல்யுத்த வீரர்களை வென்றதால் ‘மாமல்லன்’ என்ற சிறப்பு பெயர் பெற்றார். இந்நிலையில், மாமல்லன் ஜெயந்தி விழா குழுவின் சார்பில் நேற்று மாமல்லபுரத்தில் முதலாம் நரசிம்ம வர்ம பல்லவருக்கு ஜெயந்தி பெருவிழா கொண்டாடப்பட்டது.

விழா குழு தலைவர் வரதராஜன் தலைமையில், பழைய சிற்ப கல்லூரி வளாகம் மற்றும் இசிஆர் நுழைவாயில் அருகே உள்ள முதலாம் நரசிம்ம வர்ம பல்லவர் சிலைக்கு, உடையார் பாளையம் ஜமீன்தார் ராஜ்குமார் சண்முகம், பிச்சாவரம் ஜமீன் மன்னர் மன்னன் சூரப்ப சோழனார் ஆகியோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். பாமக மாவட்ட செயலாளர் காரணை ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் ராஜசேகர், பாமக நிர்வாகிகள் என்.எஸ்.ஏகாம்பரம், கணேசமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாமல்லபுரம் மல்லீகேஷ்வரர் கோயிலில் யாகம் வளர்த்து, முதலாம் நரசிம்ம வர்ம பல்லவர் பெயருக்கு அர்ச்சனை செய்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

Related Stories: