தேசிய சுற்றுலா தினம்: பயணிகளுக்கு விழிப்புணர்வு

மாமல்லபுரம்:ஆண்டுதோறும், ஜனவரி 25ம் தேதி தேசிய சுற்றுலா தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பன்முகத்தன்மை, பன்முக கலாச்சாரத்தின் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் சுற்றுலாவின் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது. இதையெட்டி, உலகம் முழுவதும் உள்ள சமூகத்தில் சுற்றுலாவின் முக்கியத்துவம், அதன் கலாச்சாரம் மற்றும் பொருளாதார மதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தியாவில் தேசிய சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், தேசிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு, சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாமல்லபுரம் தொல்லியல் துறை உதவி பொறியாளர் சரவணன் தலைமையில், தொல்லியல் துறை ஊழியர்கள் புராதன சின்னங்களான வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் ஆகிய இடங்களில் தூய்மை பணியை மேற்கொண்டனர்.

Related Stories: