மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் நிகழ்ச்சி; அமைச்சர் நாசர் மரியாதை

ஆவடி: மொழிபோர் தியாகிகளின் வீரவணக்க நாளை முன்னிட்டு, அவர்களது உருவ படத்திற்கு அமைச்சர் ஆவடி நாசர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாளை முன்னிட்டு, அவர்களது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஆவடியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளரும் பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கி மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஜெயபாலன், நரேஷ்குமார், விமல்வர்ஷன், ஆவடி மாநகர செயலாளர்கள் ஜி.ராஜேந்திரன், பேபிசேகர், ஜி.நாராயணபிரசாத், பொன்.விஜயன், திருவேற்காடு நகர செயலாளர் என்.இ.கே.மூர்த்தி, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல், திருவள்ளூர் தேரடியில் மேற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் டி.கே.பாபு தலைமை வகித்தார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் கு.பிரபாகரன், எம்.எம்.லிங்கேஷ்குமார், ஆ.ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் மொழிப்போர் தியாகிகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் நகர செயலாளர் கா.மு.தயாநிதி, முன்னாள் நகரமன்ற தலைவர் பொன.பாண்டியன், ஞானகுமார், பன்னீர், பாலச்சந்தர், நகர மாணவர் அணி நிர்வாகிகள் ப.சாந்தகுமார், ஆர்.ராம்குமார், ஜே.அஜய், கே.ராம்குமார் ப.சரவணன், ப.விஜய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: