நாள்தோறும் ஆயிரத்துக்கு அதிகமானோருக்கு தொற்று குமரியில் கொரோனா பாதிப்பு 74 ஆயிரத்ைத தாண்டியது

நாகர்கோவில், ஜன.26: குமரி மாவட்டத்தில் கொரோனா 3 வது அலை தொடங்கிய பின் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 74 ஆயிரத்தை தாண்டியது. குமரி மாவட்டத்தில் நாள்தோறும் 1000த்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் 4,485 பேருக்கு சளி பரிசோதனை நடந்தது. இதன் முடிவுகள் நேற்று காலை வெளியானது. இதில் 1,068 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் கர்நாடகாவையும், 6 பேர் கேரளாவையும் சேர்ந்தவர்கள் ஆவர். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், விருதுநகர், தென்காசி மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீதி 1,055 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். ஆண்கள் 530 பேரும், பெண்கள் 538 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 33 ஆண் குழந்தைகளும், 28 பெண் குழந்தைகளும் அடங்குவர்.

நாகர்கோவில் மாநகராட்சியில் 182 பேர், அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 78 பேர், கிள்ளியூர் ஒன்றியத்தில் 57 பேர், குருந்தன்கோடு ஒன்றியத்தில் 76 பேர், மேல்புறத்தில் 143 பேர், முஞ்சிறையில் 79 பேர், ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் 66 பேர், திருவட்டாரில் 171 பேர், தோவாளை ஒன்றியத்தில் 76 பேர், தக்கலை ஒன்றியத்தில் 127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 74 ஆயிரத்து 62 ஆக உயர்ந்துள்ளது. 2 வது அலையில் அதிகபட்சமான உயிரிழப்புகள் நிகழ்ந்தன. ஆனால் தற்போது பரவி வரும் 3 வது அலையில் உயிரிழப்புகள் குறைந்துள்ளது.

குமரி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த மாதம் உயிரிழப்புகள் இல்லாமல் இருந்தது. ஜனவரி 1ம் தேதியில் இருந்து தொற்று வேகமெடுக்க தொடங்கிய பின் ஒருவர்  அல்லது 2 பேர் என உயிரிழப்புகள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. கடந்த வாரம் மட்டும் ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் ஒரு வாரம் உயிரிழப்புகள்  இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 2 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் வயதானவர்கள் மற்றும் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதுடன், தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் என டாக்டர்கள் கூறி உள்ளனர். 3 வது அலை தொடங்கிய பின் கடந்த 25 நாட்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளை குறைக்கும் வகையில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தி ெகாள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் ெகாள்ள வேண்டும். தடுப்பூசியும், முக கவசமும் மிகவும் அவசியம் என்று சுகாதாரத்துறையினர் கூறி உள்ளனர்.

Related Stories: