அமலிநகர் கடற்கரையில் தூண்டில் பாலம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி திருச்செந்தூர், ஜன. 26: திருச்செந்தூர் அமலி

நகர் மீனவர் கிராமத்தில் தூண்டில் பாலம் அமைக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிரு ஷ்ணன் உறுதியளித்தார். திருச்செந்தூர் அமலிநகர் கடற்கரையில் கடந்த சில ஆண்டுகளாக கடலரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மீனவர்கள், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அமலிநகரில் கடலரிப்பை தடுக்கும் வகையில் அங்கு தூண்டில் பாலம் அமைப்பதற்கான இடங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் மீன் வளத்துறை தலைமைப் பொறியாளர் ராஜூ, தூத்துக்குடி மண்டல பொறியாளர் சரவணக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் ரவி, தயாநிதி ஆகியோரிடம் தூண்டில் வளைவு பாலம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கடலரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில் பாலம் அமைப்பதற்காக, ஐஐடி பேராசிரியர்கள் மூலம் குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் திட்ட மதிப்பீடு அளித்தவுடன் இந்தப் பகுதியில் தூண்டில் பாலம் அமைக்கப்படும், என்றார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங், தாசில்தார் சுவாமிநாதன், ஆர்ஐ மணிகண்டவேல், விஏஓ வைரமுத்து, அமலிநகர் பங்குதந்தை ரவீந்திரன்பர்னாந்து, ஊர் கமிட்டி தலைவர் பிரைமன், துணை தலைவர் மங்களதாஸ், பொருளாளர் ஜெயபால், துணை பொருளாளர் ஜேசுமிக்கேல், ஸ்டாலின், சொசைட்டி தலைவர் மனோகரன், பிரைசில், திமுக மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், ஒன்றிய செயலாளர்கள் செங்குழிரமேஷ், நவீன்குமார், இசக்கிபாண்டியன், நகர பொறுப்பாளர் வாள்சுடலை, மாவட்ட அணி அமைப்பாளர்கள் ராமஜெயம், தர்ரொட்ரிகோ, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் இசக்கிமுத்து, பொன்முருகேசன், சுதாகர், திருச்செந்தூர் செந்தில்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் கோமதிநாயகம், செந்தில்ஆறுமுகம், ரஜூலா, வீரமணி, ரூபன், சந்திரசேகரன், நம்பிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: