இருவப்பபுரத்தில் பகுதிநேர ரேஷன் கடை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார்

ஏரல்,  ஜன. 26: சாயர்புரம்  அருகே பேய்குளம், பிரம்மையாபுரம், காடோடிபனை, மணக்காடு, சோலைப்புதூர்,  பெரும்படைசாஸ்தா கோயில், பெத்தநாச்சியம்மன் நகர் உட்பட பகுதி கிராம மக்கள், 3 கிமீ தொலைவிலுள்ள செபத்தையாபுரம் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி வந்தனர். இவர்கள் தங்கள் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர நடவடிக்கை  எடுக்க வேண்டுமென வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி  அமிர்தராஜிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து எம்எல்ஏ நடவடிக்கை  எடுத்து செபத்தையாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் நடத்தி வரும்  செபத்தையாபுரம் 2 ரேஷன் கடையில் இருந்து 426 குடும்ப அட்டைகளை பிரித்து  அவர்களுக்கு இருவப்பபுரம் சாலையில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று  காலை நடந்தது. தலைமை வகித்த ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, புதிய பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு  பொருட்களை வழங்கினார். இக்கடை வாரத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் செயல்படும்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க  துணை பதிவாளர் ரவீந்திரன், கள அலுவலர் சேஷகிரி, கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் சரவணபெருமாள், வட்ட வழங்கல் அலுவலர் முரளிதரன், செபத்தையாபுரம் கூட்டுறவு வங்கி செயலர்  தர், உதவியாளர் மோகன், சாயர்புரம் நகர திமுக செயலாளர் அறவாழி, மாவட்ட திமுக விவசாய அணி துணை  அமைப்பாளர் ராயப்பன், மாவட்ட பிரதிநிதி பேய்குளம் ஜெயக்குமார், சாயர்புரம்  பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் கண்ணன், தெற்கு மாவட்ட காங். துணை  தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், இளைஞர் காங். தலைவர் ஜெயசீலன் துரை,  பொதுச்செயலாளர் இசைசங்கர், வைகுண்டம் வடக்கு வட்டார தலைவர்  சொரிமுத்துபிரதாபன், துணை தலைவர் பிரவீணா, சாயர்புரம் நகர தலைவர் ஜேக்கப்,  ஊடகப்பிரிவு மரியராஜ், சிவத்தையாபுரம் தொழிலதிபர் பரமசிவன்,  பேய்க்குளம் நிலச்சுவான்தார்கள் அபிவிருத்தி சங்கம் துணை தலைவர் ஆடிட்டர்  சுயம்புராஜ், செயலாளர் ஜெயபொன்ராஜ், துணை செயலாளர் ஞானராஜ், ஆலோசகர்  பாலசுப்பிரமணியன் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: