×

மெல்லும் புகையிலை மீதான தடையை நீக்க கோரி குடந்தையில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

கும்பகோணம்,ஜன.26: மெல்லும் புகையிலை மீதான தடையை நீக்க வேண்டும் என கோரி கும்பகோணத்தில் சிஐடியூ‌ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காந்தி பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புகையிலை தொழிலாளர் சங்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். சிஐடியூ மாவட்ட பொருளாளர் கண்ணன், சிஐடியூ கவுரவ தலைவர் செந்தில்குமார், ஓய்வூதியர் சங்க மாவட்ட இணை செயலாளர் பழ.அன்புமணி மற்றும் புகையிலை தொழிலாளர்கள் சங்க தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் மெல்லும் புகையிலை மீதான தடையை அரசு நீக்க வேண்டும். புகையிலை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், புகையிலை தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத காலத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்‌‌ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags : CITU ,Kuttanad ,
× RELATED எப்சி கட்டணஉயர்வை கைவிடகோரி சிஐடியூ...