×

ஒரத்தநாடு அருகே இளம் பெண் திடீர் மாயம் போலீசில் கணவர் புகார்

ஒரத்தநாடு,செப்.26: ஒரத்தநாடு அருகே உள்ள வாட்டாத்தி கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. அவரது மனைவி ரூபா (24). கிருஷ்ணமூர்த்தி விவசாய கூலி தொழிலாளி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வீட்டுக்கு வந்தபோது மனைவி ரூபா காணவில்லை. இதில் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து வாட்டாத்தி கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Orathanadu ,
× RELATED ஒரத்தநாடு அருகே மணல் கொள்ளை வழக்கு 3 பேர் குண்டாசில் கைது