×

மணல் கடத்திய 2 மாட்டு வண்டி பறிமுதல்

தா.பழூர், ஜன.26:அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சாமிதுரை தலைமையிலான காவல்துறையினர் முத்துவாஞ்சேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது முத்துவாஞ்சேரி--தூத்தூர் சாலையில் 2 மாட்டு வண்டியில் வந்தவர்களை மறித்து சோதனை செய்தனர். அந்த 2மாட்டு வண்டிகளிலும் முத்துவாஞ்சேரி கொள்ளிடம் ஆற்றுப் படுகை பகுதிகளிலிருந்து சாத்தாம்பாடி பகுதிகளுக்கு எந்தவித அரசு அனுமதியும் இன்றி மணல் கடத்தியது தெரியவந்தது. பின்னர் 2 மாட்டு வண்டிகளையும் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த சாத்தாம்பாடி வடக்கு தெருவைச் சார்ந்த முருகேசன் (45), ராஜா (37) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திருவையாறு அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்