×

பெரம்பலூர் அருகே நெகிழ்ச்சி விவசாயி விஷம் குடித்து தற்கொலை

தா.பழூர், ஜன.26: விக்கிரமங்கலம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கணக்கம்பாளையம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம் (32). விவசாயி. இவருக்கு சேர வேண்டிய பூர்வீக சொத்தை இவரது தந்தைவழி உறவினரிடம் தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து கொடுக்கும்படி கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பலமுறை கேட்டும் இவருக்கு சொத்தை பிரித்துக் கொடுக்காததால் மனமுடைந்த முருகானந்தம் வீட்டில் யாரும் இல்லாத பொழுது தனது விவசாய நிலத்திற்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் முருகானந்தத்தை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முருகானந்தம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் முருகானந்தத்தின் மனைவி விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் உதவி ஆய்வாளர் சாமிதுரை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags : Perambalur ,
× RELATED எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு