×

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினம் கடைபிடிப்பு, உறுதிமொழி ஏற்பு

கரூர், ஜன. 26: தேசிய வாக்காளர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம்தேதி நாளன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் 12வது தேசிய வாக்காளர் தினமானது கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுடன் வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. புதிதாக வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்க்கப்பட்ட 5 இளைய தலைமுறை வாக்காளர்களுக்கு மாவட்ட கலெக்டரால், வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை நேரடியாக வழங்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கரூர் மாவட்டத்தின் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் புதிதாக வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள 20 புதிய தலைமுறை வாக்காளர்களுக்கு கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மூலம் வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், அனைத்து கோட்டாட்சியர்கள், தாசில்தார் அலுவலகங்களில் காணொலி காட்சி வாயிலாக மாவட்ட கலெக்டர் தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டு, புதிய வாக்காளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள மற்ற வாக்காளர்களுக்கு வண்ண புகைப்ப அடையாள அட்டை அஞ்சலகம் வாயிலாக நேரடியாக அவரவரர் வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார். நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், நேர்முக உதவியாளர் (பொது) சைபுதீன், தேர்தல் தாசில்தார் கண்ணன் உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தரகம்பட்டி: கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் உள்ள கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கிறிஸ்டின் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் ராணி முன்னிலை வகித்தார். இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலர் பணி புரியும் பணியாளர்கள் கலந்து கொண்டு தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags : National Voter's Day ,Karur ,Collector ,Office ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...