கரூர் திருமாநிலையூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர், ஜன.26: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (கும்பகோணம்) கரூர் மண்டல தொழிலாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கரூர் மண்டல பொதுச் செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார். அனைத்து நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். சம்மேளன நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார் நன்றி கூறினார். 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம், டிஏ உயர்வு 2003க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஒய்வூதிய திட்ம், ஒய்வு பெற்றவர்களுக்கு மருத்துவ திட்டம், போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட நிதியுதவி என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories: