கிருஷ்ணராயபுரம் அருகே காவிரியாற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலி

கிருஷ்ணராயபுரம், ஜன.26: குளித்தலை தாலுகா தோகைமலை அருகே கீழவெளியூர் பகுதி அழகணம்பட்டியைச் சேர்ந்த லோகநாதன் மகன் கிஷோர்குமார் (21). இவர் சித்தா ஆர்த்தோ படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி 23ஆம் தேதி மாலை தனது நண்பர்களுடன் திருக்காம்புலியூர் செல்லாண்டி அம்மன் கோயில் அருகே காவிரி ஆற்றிற்கு குளிக்கச் சென்று உள்ளார். நீரின் ஆழமான பகுதியில் இறங்கியதால் கிஷோர் குமார் காவிரி ஆற்றின் நீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த கரூர் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர். . இதுகுறித்து மாயனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: