நிலப்பிரச்னையில் தகராறு விவசாயியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

தோகைமலை, ஜன.26: தோகைமலை காவல்சரகம் கடவூர் பகுதி வௌ்ளபட்டி ஊராட்சி கணக்கப்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (60). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை அருகில் உள்ள பென்னிபட்டியை சேர்ந்த வசந்தா என்பவருக்கு குத்தகைக்கு கொடுத்ததாக தெரிகிறது. இது சம்மந்தமாக குளித்தலை நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கணக்கப்பிள்ளையூரில் உள்ள தனது தோட்டத்தில் துரைசாமி இருந்து உள்ளார். அப்போது அங்கு வந்த வசந்தாவின் தரப்பை சேர்ந்த ஆண்டியப்பன் என்பவர் உழவு செய்வதற்காக வந்து உள்ளார். இதனால் தனது நிலத்தில் உழவு செய்யக்கூடாது என்று துரைசாமி கூறி உள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகதெரிகிறது. அதனை தொடர்ந்து ஆண்டியப்பன் மற்றும் இவர் தரப்பை சேர்ந்த வசந்தா, மல்லிகா, முருகேசன் ஆகியோர் துரைசாமியை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். இதுகுறித்து தோகைமலை காவல்நிலையத்தில் துரைசாமி புகார் அளித்தார். அதன்பேரில் ஆண்டியப்பன், வசந்தா, மல்லிகா, முருகேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: