கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் எருது விடும் விழா ஆலோசனை கூட்டம்

கே.வி.குப்பம், ஜன.26: கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் எருது விடும் திருவிழா ஆலோசனை கூட்டம் நடந்தது. கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் எருது விடும் திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் சப்-கலெக்டர் தனஞ்செயன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட உதவி கலெக்டர் (பயிற்சி) ஐஸ்வர்யா ராமாநாதன் பங்கேற்று விழா குழுவினர்களுக்கு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில், உள்ளூர் காளைகளுக்கு மட்டுமே பதிவு செய்து டோக்கன் வழங்க வேண்டும். வெளியூரில் இருந்து வரப்படும் காளைகளை அனுமதிக்க கூடாது. காளைகள் மீது பந்தயம் கட்டுதல் கூடாது. காளைகள் முன்கூட்டியே கால்நடை பராமரிப்பு துறையிடம் பரிசோதனை செய்து தகுதிச்சான்று பெற்ற வேண்டும். வாடிவாசலில் காளைகளின் உரிமையாளர்களை தவிர பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்க கூடாது. குறைந்தபட்சம் 2 ஆம்புலன்ஸ் இருக்க வேண்டும். 150 பார்வையாளர்களுடன் மட்டுமே நடத்த வேண்டும். பார்வையாளர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதலை கடைபிடித்து விழா நடத்த வேண்டும். விதிமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில், துணை தாசில்தார் பலராமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், பிச்சாண்டி, விஏஓ கலைவாணி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: