தமிழக காவல்துறை அதிகாரிகள் 20 பேருக்கு ஜனாதிபதி விருது

சென்னை: தமிழகத்தில் கூடுதல் டிஜிபி உட்பட 2 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காவல் துறையில் சிறந்த சேவைக்கான பதக்கங்களை ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 18 காவல் அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருதுகள் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு ஒன்றிய அரசு தமிழகத்தை சேர்ந்த சென்னை தலைமையிட கூடுதல் டிஜிபி வெங்கட்ராமன் மற்றும் தஞ்சாவூர் சிறப்பு பிரிவு சிஐடியில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் சிவனருள் ஆகிய 2 காவல் துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழக காவல் துறையில் சிறந்த சேவைக்கான பணிக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 18 காவல் அதிகாரிகளுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு: தமிழக காவல் துறை மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் பிரதீப் குமார், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், சென்னை நிர்வாக பிரிவு ஏஐஜி சரவணன், சென்னை க்யூ பிரிவு எஸ்பி கண்ணம்மாள், சென்னை மாநகர போக்குவரத்து திட்டப்பிரிவு துணை கமிஷனர் சுரேந்திரநாத், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 12வது பட்டாலியன் கமாண்டன்ட் (மணிமுத்தாறு) கார்த்திகேயன், சென்னை க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சென்னை தேசிய போதை தடுப்பு பிரிவு சிஐடி கூடுதல் எஸ்பி தாமஸ் பிரபாகர், சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பிரபாகரன், கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் முருகவேல், கோவை மாநகர சிபிசிஐடி டிஎஸ்பி முரளிதரன், கடலூர் ஊழல் மற்றும் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம், கோவை மாநகர போக்குவரத்து திட்ட பிரிவு கூடுதல் துணை கமிஷனர் இளங்கோவன், சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகேசன், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் சிவகணேசன், திருச்சி சிறப்பு நுண்ணறிவு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன், சென்னை தலைமையிட எஸ்பிசிஐடி சிறப்பு உதவி ஆய்வாளர் பசுபதி ஆகிய 18 காவல் அதிகாரிகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: