தேர்தல் குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு கூட்டம் வரும் 28ம் தேதி கூடுகிறது: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி தற்போது நேதாஜியின் புகழ் பாட ஆரம்பித்து இருக்கிறார். மோடிக்கு பட்டேலின் புகழையோ, நேதாஜியின் புகழையோ பரப்ப வேண்டும் என்பது நோக்கமல்ல. மாறாக காந்தியின் புகழை பின்னடைவுக்கு கொண்டு வரவேண்டும். நேருவை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் முகாமில் யாரும் இல்லாததால், எங்கள் முகாமில் 2 பேரை தேர்ந்தெடுத்து இதுபோன்று செய்து வருகிறார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிடம் அதிக இடங்களை கேட்டுப் பெறுவோம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து  விவாதிக்க, வரும் 28ம்தேதி செயற்குழு கூட்டம் கூடுகிறது. மூத்த  தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்.  இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது,  ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, துணைத் தலைவர்கள் ஆர்.தாமோதரன், பொன் கிருஷ்ணமூர்த்தி, பொதுச்செயலாளர்கள் சிரஞ்சீவி, காண்டீபன், மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், எம்.பி.ரஞ்சன் குமார், எம்.ஏ.முத்தழகன், நாஞ்சில் பிரசாத், அடையார் டி. துரை, ஜெ.டில்லிபாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: