மோகனூர் அருகே ஆடு திருடிய 3 பேர் கைது

மோகனூர்: மோகனூர் அருகே ராசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார்(33). மெக்கானிக்கான இவர், வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை வீட்டில் கட்டியிருந்த 5 ஆடுகளை மர்ம நபர்கள் காரில் ஏற்றிக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அவர் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், எஸ்ஐ ஓவியா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். இந்நிலையில் சந்தேகத்தின்பேரில் மோகனூர் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த குமார்(19), பெரியார் நகரைச் சேர்ந்த கார் டிரைவர் வீரமணி(22), அஜித்(19) ஆகிய 3 பேரிடம் விசாரித்ததில் ஆடு திருடியதை ஒப்புக்கொண்டனர். உடனே, 3 பேரையும் கைது செய்த போலீசார் கார் மற்றும் ஆடு விற்பனை செய்த வகையில் கிடைத்த பணத்தையும் கைப்பற்றினர்.

Related Stories: