விவசாயிகளுக்கு மாணவர்கள் பயிற்சி

காரியாபட்டி: காரியாபட்டி வட்டார வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் திருவில்லிபுத்தூர் அருகே கலசலிங்கம் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரியின் இறுதி ஆண்டு இளநிலை வேளாண்மை துறை மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இவர்கள் முஷ்டக்குறிச்சி கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் உதவி தோட்டக்கலை இயக்குனர் டாக்டர் கார்த்திக், தோட்டக்கலை அலுவலர் ஆயிஷா, உதவி தோட்டக்கலை அலுவலர் அகல்யா, முஷ்டக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் காய்கறி உற்பத்தி பெருக்குத்திட்டத்தின் அவசியம் மற்றும் பயன்கள் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் வேளாண்மை துறை மாணவர்கள் சிவநந்தா, சீனிவாசன், வீரமணிதங்கம், ராம், அருண் குமார், ஜெயராம், கருப்புச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: