×

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவு எதிரொலி குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு கூட்டம்

திருச்சி, ஜன. 25: திருச்சி மாநகர கமிஷனராக பொறுப்பேற்ற கார்த்திகேயன், சட்டம்,ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்களை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் குற்றச்சம்பவங்கள் நடக்காத வண்ணம் விழிப்புணர்வு கூட்டம் நடத்தவும் மாநகர போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், 6 காவல் சரகங்களில் உள்ள உதவி கமிஷனர்கள் தலைமையில் நடக்கும் குற்ற தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் பிரச்னைக்குரிய பகுதிகளில் நடக்கும் கூட்டத்தில் கமிஷனர் கார்த்திகேயன் பங்கேற்று தேவையான ஆலோசனை வழங்கி வருகிறார். கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் முக்கிய கடைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த அறிவுறுத்தி வருகிறார். இதில் கன்டோன்மென்ட் சரகத்தில் உதவி கமிஷனர் அஜய் தங்கம் தலைமையில் மத்திய பஸ் நிலையம், கல்லுக்குழி, பொன்மலை சரகத்தில் உதவி கமிஷனர் காமராஜ் தலைமையில் நகை கடைகள், அடகுக்கடைகள் உரிமையாளர்கள் கூட்டத்தில் கடை முன் மற்றும் பிற பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதுபோல் மற்ற 4 சரகங்களில் உள்ள முக்கிய பகுதிகளில் நடந்த குற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் மாநகர கமிஷனர் பங்கேற்று தேவையான அறிவுரைகளை வழங்கினார். அப்போது பொதுமக்களுடன் இணைந்து போலீசாரும் குற்றச்சம்பவங்களை தடுக்கு செயலாற்ற வேண்டும் என கூறினார்.

Tags : Trichy ,Municipal ,Police Commissioner ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...