×

ஸ்ரீபெரும்புதூர் பஜாரில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: கடைக்காரர்களுக்கு அபராதம்

ஸ்ரீபெரும்புதூர்:  ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி பஜார் வீதியில் உணவகங்கள், தேனீர் கடைகள், ஓட்டல், ஜவுளி கடைகள் என 1000க்கும் மேற்பட்ட கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன. பெரும்பாலான கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்வதாக பேரூராட்சி செயல் அலுவலருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

இதையடுத்து பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் கடந்த சில நாட்களாக பஜாரில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவது தெரிந்தது. இதையடுத்து அந்த கடைகளில் இருந்து சுமார் 28 கிலோ பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களிடம் மொத்தம் ₹10 ஆயிரம் அபராதம் விதித்தனர். அப்போது, பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரித்தனர்.

Tags : Sriperumbudur ,Bazaar ,
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு