சாலை பாதுகாப்பு வார துவக்க விழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கசாவடியில், தமிழ்நாடு அனைத்து  எம்சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு வார துவக்க விழா நேற்று நடந்தது. இதில் 24மணி நேர மருத்துவ குழுவின் இலவச மருத்துவ முகாம், பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களுக்கு தார்பாய்கள், இருச்சகர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம், இரவு நேரங்களில்  வாகனங்கள் முன்னால்  செல்வதை  காட்டும் ஒளிரும் பட்டைகள் உள்பட வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் உபகரணங்களை மணல் லாரி உரிமையாளர்களின் சங்க மாநில தலைவர் யுவராஜ் கொண்டு வழங்கினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.

கனரக வாகனங்களில் அதிக பாரத்தை ஏற்றி செல்வதை தடுத்தால், விபத்தை தடுக்க முடியும். அதையும்  சுங்கச்சாவடி நிர்வாகம்தான் செய்யமுடியும். இந்த சாலை பாதுகாப்பு வார விழாவில் 24மணி நேர மருத்துவ உதவி குழு இயக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கடந்த சட்டமன்ற கூட்டதொடரில் 1 யூனிட் மணல் ₹1000க்கு  வழங்குவதாக அறிவித்துள்ளது. இதை எங்களது கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

Related Stories: