×

திருவாரூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு போலீசார் விழிப்புணர்வு


திருவாரூர், ஜன.25: பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு விளக்கம் அளித்தனர். சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுக்கு பல்வேறு தொந்தரவுகள் ஏற்படுவதையடுத்து சமூக வலை தளங்களை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், பணிக்கு செல்லும் இளம்பெண்கள் மற்றும் வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்கள் எவ்வாறு பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பது குறித்து திருவாரூர் நகர் பொதுமக்களிடம் நேற்று மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மணிமேகலை மற்றும் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா ஆகியோர் துண்டு பிரசுரங்களை வழங்கி விளக்கம் அளித்தனர்.

Tags : Thiruvarur ,
× RELATED திருவாரூர் அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு