×

திருவாரூர் அருகே சிறு பாலம் கட்டுமான பணி

திருவாரூர், ஜன.25: திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சிறு பாலம் கட்டுமான பணியினை எம்எல்ஏ பூண்டி கலைவாணன் துவக்கி வைத்தார். திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் சார்பில் 2021-22ம் நிதியாண்டில் திட்டம் சாரா பணிகள் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் ரூ.9 கோடியே 44 லட்சத்தில் 31.28 கி.மீ. தூரத்திற்கு சாலைகள் புதுப்பிக்கும் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இது மட்டுமின்றி நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.13 கோடியே 77 லட்சத்தில் 48 சிறு பாலங்கள் ஆர்.சி.சி பாக்ஸ் கல்வெட்டுக்களாக புதுப்பித்து கட்டும் பணியும் நடந்து வருகிறது. இதனையொட்டி திருவாரூர் உட்கோட்டத்தின் சார்பில் ரூ.9 கோடியே 78 லட்சத்தில் 31 சிறு பாலங்கள் ஆர்.சி.சிபாக்ஸ் கல்வெட்டுக்களாக மாற்றி அமைக்கும் பணியும், 2 தடுப்புச்சவர் கட்டும் பணியும் மற்றும் 5 இடங்களில் மழைநீர் வடிகால் கட்டும் பணியும் நடந்து வரும் நிலையில் திருவாரூர் அருகே குளிக்கரை அம்மையப்பன் சாலையில் சிறு பாலம் ஒன்று கட்டுமான பணியினை நேற்று எம்எல்ஏ பூண்டி கலைவாணன் துவக்கி வைத்தார்.இதில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிவகுமார், இளநிலை பொறியாளர் குமாரசெல்வன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvarur ,
× RELATED திருவாரூர் அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு