×

கொப்பனாபட்டியில் ரூ.9.05 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம்

பொன்னமராவதி, ஜன.25: பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டியில் ரூ.9.05 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். கொப்பானபட்டி ஊராட்சி கொன்னையூரில் ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.9.05 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை வகித்தார். புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினை சட்ட அமைச்சர் ரகுபதி திறந்து வைத்து பேசியதாவது, நர்சரி பள்ளிக்கு இணையான கல்வியை வழங்கி வருகின்றது. இந்த அங்கன்வாடி மையம். ஆங்கிலப்பள்ளிக்கு சென்று கற்கும் அடிப்படைக்கல்வி அங்கன்வாடி மையத்தில் கிராமப்புற குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. அனைத்து அடிப்படை ஆரம்பக்கல்வியை தரும் இது போன்ற மையங்களில் தாய்மாரகள் தங்கள் குழந்தைகளை அழைத்துச்சென்று பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, இலுப்பூர் ஆர்டிஓ தண்டாயுதபாணி, ஒன்றியக் குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, ஒன்றியக்குழு துணைத் தலைவர் தனலெட்சுமி அழகப்பன், ஒன்றிய ஆணையர்கள் சதாசிவம், வெங்கடேசன், தாசில்தார் ஜெயபாரதி, ஊராட்சி தலைவர் மேனகா மகேஸ்வரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், நகர செயலாளர் அழகப்பன், மாவட்ட துணைச்செயலாளர் சின்னையா, காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன், சமூக வலைதள தொகுதி பொறுப்பாளர் ஆலவயல் முரளி சுப்பையா, நிர்வாகிகள் தட்சணாமூர்த்தி, கோவைராமன் ,ஆலவயல் சண்முகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : New Anganwadi Center ,Koppanapatti ,
× RELATED புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு