×

மலேசியாவில் இறந்த கணவரின் உடலை பெற்று தர வேண்டும்

அரியலூர், ஜன.25: மலேசியாவில் கூலி வேலை செய்து வந்த தனது கணவர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை பெற்றுத்தரக்கோரி வேண்டும் என்று மனைவி மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதியிடம் மனு அளித்துள்ளார். அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த மணப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(47). தச்சு வேலை செய்து வந்தார். இவருக்கு போதிய வருமானம் கிடைக்காமல், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா சென்றுள்ளார். அங்கு கூலி வேலை பார்த்து வந்த நிலையில், நேற்று (24ம்தேதி) காலை நெஞ்சுவலி காரணமாக ராஜேந்திரன் இறந்து விட்டதாக அவரது மனைவி காந்திமதிக்கு போன் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த காந்திமதி, தனது 2 குழந்தைகளுடன் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனது கணவரின் உடலை பெற்று தர வேண்டும் என மனு அளித்தார். ராஜேந்திரன்-காந்திமதி தம்பதியினருக்கு தரணி(18), சக்தி(14) என 2 மகன்கள் உள்ளனர்.

Tags : Malaysia ,
× RELATED மலேசியாவில் கொத்தடிமையாக உள்ள மகனை மீட்டுத்தர வேண்டும் பெற்றோர் மனு