குளத்தில் குதித்து வாலிபர் தற்கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் குளத்தில் நேற்று காலை  வாலிபர் சடலம் மிதந்தப்பதாக திருவள்ளூர் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்று தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும், போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் இளங்கோவன், தீயணைப்பு வீரர் ஞானவேல் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று வாலிபரின் சடத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், திருவள்ளூர் வீரா நகர் தகனிக்கோட்டை தெருவை சேர்ந்த யுவராஜ்(32) என்பதும், திருவள்ளூரில் உள்ள காஸ் கம்பெனியில் உதவியாளராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி நித்தியா என்ற மனைவியும், 9 வயதில் தரணீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், குடிப்பழக்கம் உடைய இவர் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இதன் காரணமாக கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு நித்யா கணவர் மீது கோபித்துக் கொண்டு தன் மகனுடன் தனியாக சென்றுவிட்டார். மனைவி மற்றும் மகன் தன்னுடன் இல்லை என்ற ஏக்கத்தில் யுவராஜ் அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார். அவர் தனது மனைவி மகன் பிரிந்து சென்ற ஏக்கத்தில் கோயில் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Related Stories: