சென்னீர்குப்பம் ஊராட்சியில் சாலையில் தேங்கும் கழிவுநீர்

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் ஊராட்சியில் ஆவடி செல்லும் சாலை, சென்னீர்குப்பம் சந்திப்பு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் பூந்தமல்லி நகராட்சியில் இருந்து வரும் கழிவுநீர் சாலையில் தேங்கி குளம்போல் தேங்கியுள்ளது.

இதனை அகற்ற வேண்டும் என பூந்தமல்லி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை சென்னீர்குப்பம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிரந்தரமாக கழிவுநீர் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. அவ்வப்போது மின்மோட்டார்களை வைத்து கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டாலும் தொடர்ந்து அந்த பகுதியில் கழிவுநீர் குளம்போல் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவி வருகிறது.  

இந்நிலையில், சென்னீர்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் கோட்டீஸ்வரி அன்பு மற்றும் வார்டு உறுப்பினர்கள் பூந்தமல்லி நகராட்சி கமிஷனரை அவரது அலுவலகத்திற்கு நேற்று நேரில் சந்தித்து சென்னீர்குப்பம் பகுதியில் தேங்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Related Stories: