மகனுக்கு ரத்த அடைப்பினால் சிறுமூளை பாதிப்பு

கரூர், ஜன. 25: மகனுக்கு மருத்துவ நிதியுதவி வேண்டி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா சாந்தப்பாடி கிராம பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:

எனக்கு 17 வயதில் அரிவாசு என்ற மகன் உள்ளார். மகனுக்கு ரத்த அடைப்பின் காரணமாக சிறுமூளை பாதிப்பு ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை இல்லாததால், மருத்துவர்களின் அறிவுரையின்பேரில், கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்து இதுவரை 30 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கி சிகிச்சை அளித்து வருகிறேன். சிகிச்சை காரணமாக மகனின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மகனை காப்பாற்ற வேண்டும் என்றால் மேலும் சிகிச்சை அவசியம் என கூறப்படுகிறது. சக்திக்கு மீறி கடன் வாங்கி செலவழிப்பது என்பது சாத்தியமில்லாத நிலையில் உள்ளேன். எனவே, மகனை காப்பாற்ற மருத்துவ நிதியுதவி செய்து தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: