×

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வேப்பூர், ஜன. 25:  வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஒன்றிய அரசு உரிய நிவாரணம் வழங்கக்கோரியும், வேப்பூர் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்து தரமான சிகிச்சை வழங்கிட கோரியும்,  வேப்பூர் வட்டத்திலுள்ள சிப்காட் தொழிற்பேட்டை பணியை துரிதப்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தக் கோரியும், வேப்பூர் பேருந்து நிலையத்தை போர்க்கால அடிப்படையில் பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச்செயலாளர் சிவஞானம் தலைமையில் 30க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் முத்துசாமி, சந்திரன், ராஜ்குமார், பெரியசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகி ரவிச்சந்திரன், வட்டக்குழு உறுப்பினர்கள் சாமிதுரை, சோமு, வேல்முருகன், கருப்பையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காட்டுமன்னார்கோவில் அருகே கோவில்பத்து அம்பேத்கர் நகரில் குடியிருக்கும் மக்களுக்கு சாலை வசதி, ராஜசூடாமணி புதுத் தெருவில் குடியிருக்கும் மக்களுக்கு சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது