×

தண்டவாளம் சீரமைக்கும் பணி

விருத்தாசலம், ஜன. 25: விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே ராட்சத இயந்திரங்கள் மூலம் ரயில் தண்டவாளம் சீரமைக்கும் பணி நடைபெற்றது. சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விருத்தாசலம் ரயில் நிலையம் வழியாக ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இந்த வழியாக சென்று வருகிறது. இந்நிலையில் ரயில் நிலையத்திற்கும், விருத்தாசலம் புறநகர் ரயில் நிலையத்துக்கும் இடையே சுமார் 200 மீட்டர் தண்டவாளம் தேய்மானம் ஆனதால் அப்பகுதியில் சிக்னல் கோளாறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக தேய்மானம் அடைந்துள்ள தண்டவாளங்களை அகற்றி புதிய தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் அதி நவீன ராட்சத இயந்திரங்கள் மூலம் ரயில்வே பணியாளர்கள் பணியை மேற்கொண்டனர்.

Tags :
× RELATED பண்ருட்டி பிரதீபா கேஷ்யூஸ்க்கு சிறந்த ஏற்றுமதிக்கான தங்க விருது