×

மளிகை கடைகளில் கோட்டாட்சியர் ஆய்வு

சேத்தியாத்தோப்பு, ஜன. 25:சேத்தியாத்தோப்பு பகுதிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத ஜவுளிகடைகள் மற்றும் மளிகை கடைகள்  உட்பட 7 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு மர்ம விஷ காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவி தலைமையில் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராமன், பேரூராட்சி ஊழியர் செல்வராசு, கிராம நிர்வாக அலுவலர் ஷேஷாத்திரி, சேத்தியாத்தோப்பு எஸ்.ஐ.க்கள் நடனம், அன்பரசன், கிராம உதவியாளர் அன்புதாஸ் உட்பட குழுவினர் போலீசாருடன் சென்று  துணிகடைகள், மளிகை கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது 7 கடைகளில் கொரோனா விதிமுறைகள் மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் ரூ,500 வீதம் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தார்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை