ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை

கடலூர், ஜன. 25: நாட்டின் குடியரசு தின விழா நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலூர் முதுநகர் ரயில் நிலையத்தில், ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, ஏட்டு காந்திமதி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நேற்று காலை கடலூர் முதுநகர் ரயில் நிலையத்துக்கு வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் தீவிர சோதனை நடத்தினர். ரயிலில் வந்த பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். ரயில் தண்டவாளங்கள், பாலங்கள், ரயில் நிலைய அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனையில் ஈடுபட்டனர்.

சிதம்பரம்:  சிதம்பரம் ரயில்வே இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தலைமைக் காவலர் பாஸ்கர் மற்றும் போலீசார் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் மற்றும் ரயிலில் இருந்து இறங்கி சென்ற பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்வதற்காக சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் ஏறி போலீசார் பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர்.

Related Stories: