திட்டக்குடி, முஷ்ணம், விருத்தாசலத்தில் மா. கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி, ஜன. 25:    திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். வட்ட குழு உறுப்பினர்கள் அரவிந்தன், மாணிக்கவேல், சுமதி, பன்னீர்செல்வம், ராஜ்குமார், லெலின், மாயவன் முன்னிலை வகித்தனர். மாவட்டக்குழு ராஜேந்திரன், விவசாய சங்க மாவட்ட நிர்வாக குழு மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர். திட்டக்குடி அரசு மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவ மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   

முஷ்ணம்: முஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டக்குழு வெற்றிவீரன் தலைமை தாங்கினார். நகர குழு கிருஷ்ணமூர்த்தி, தினேஷ்பாபு, பாண்டுரங்கன், பெருமாள், பழனிவேல், பாலு, கசந்தாமணி, ஞானஉமா ஆகியோர் கலந்து கொண்டனர். விருத்தாசலம்: விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் வழக்கறிஞர் குமரகுரு தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் அசோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வன், வழக்கறிஞர் சந்திரசேகரன், கருப்பையா முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் அரசு மருத்துவமனையை அதிநவீன பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: