8 தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் ஆணை காட்பாடியில் நடந்த ஆசிரியர்கள் கலந்தாய்வில்

வேலூர், ஜன.25: காட்பாடியில் நடந்த ஆசிரியர்கள் கலந்தாய்வில் 8 தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரிய- ஆசிரியைகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் கலந்தாய்வு நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்தாண்டு அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கி அடுத்த மாதம் –23ம் தேதி வரை நடைபெற உள்ளது.

முதற்கட்டமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வருவாய் மாவட்டத்துக்குள் மாறுதலுக்கான கலந்தாய்வு காட்பாடி காந்திநகரில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட திட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமையில் கலந்தாய்வு நடந்தது. இதில் மாவட்டத்தில் காலியாக உள்ள 13 தலைமை ஆசிரியர் கலந்தாய்வில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தலா 3 பேரும், வேலூர் 2 பேர் என மொத்தம் பணியிட மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது. தொடர்ந்து, இன்று மாவட்டம், மாவட்டம் விட்டு கலந்தாய்வு நடைபெற உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: