×

முகவரி கேட்பது போல் நடித்து இளம்பெண்களிடம் சில்மிஷம்: கொத்தனார் கைது

வேளச்சேரி: நங்கநல்லூரை சேர்ந்த 29 வயது இளம்பெண், கடந்த 10ம் தேதி இரவு 9 மணிக்கு, வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ் சாலை வழியாக மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த நபர், இளம்பெண்ணை வழிமறித்து, மடிப்பாக்கம் செல்ல வழி கேட்டுள்ளார். அந்த இளம்பெண் மொபட்டை நிறுத்திவிட்டு, அவருக்கு வழி கூறிக்கொண்டு இருந்தார். அப்போது, அந்த நபர் திடீரென இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த இளம்பெண் அலறி கூச்சலிட்டார். உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பினார். பின்னர், இதுகுறித்து  வேளச்சேரி காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். போலீசார், விசாரணையில் பள்ளிக்கரணை, ராம் நகர்  விரிவு பகுதியை சேர்ந்த கொத்தனார் சந்தோஷ் (20) என்பவர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், தனியாக செல்லும் பெண்களை குறிவைத்தும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் செல்லும்போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.

Tags : Silmisham ,Kothanar ,
× RELATED தேன்கனிக்கோட்டை அருகே பரபரப்பு...