×

அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல் காரில் சிக்கிய பெண் பலி

பூந்தமல்லி: ஸ்ரீபெரும்புதூர், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (42). இவரது மனைவி செல்வி (38). இருவரும் நேற்று முன்தினம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியே காரில் சென்று கொண்டிருந்தனர். பூந்தமல்லி அருகே பாப்பான்சத்திரம் அருகே சென்றபோது, மாடு ஒன்று சாலையின் குறுக்கே வந்ததால் முன்னே சென்ற கன்டெய்னர் லாரி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், பின்னால் வந்த லட்சுமணனின் கார், கட்டுப்பாட்டை இழந்து கன்டெய்னர் லாரியில் மோதி, முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. காருக்கு பின்னால் வந்த 2 கன்டெய்னர் லாரிகளும் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இதில், காரில் சிக்கிய லட்சுமணனின் மனைவி செல்வி படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக பலியானார்.

Tags :
× RELATED சென்னை ராஜீவ் காந்தி அரசு...