சாஸ்த்ரா சத்சங்கத்தின் சங்கீத வாசஸ்பதி விருதுகள் 2022

சென்னை: சாஸ்த்ரா சத்சங்கத்தின் 2022ம் ஆண்டிற்கான சங்கீத வாசஸ்பதி விருதுகள் கடந்த 22ம் தேதி சென்னையில் வழங்கப்பட்டன. மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவச்சலம், ஆன்மிக சொற்பொழிவாளர் டாக்டர் சுதா சேஷையன், நாதஸ்வர சகோதரர்கள் காசிம் மற்றும் பாபு ஆகியோர் இவ்விருதுகளை பெற்றனர். ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. தற்போது டோக்கியோவில் வசித்து வரும் திருச்சியை சேர்ந்த டாக்டர் கே.இ.சீத்தாராம் விருதுகளை வழங்கி பேசினார். கர்நாடக இசை சொற்பொழிவு மற்றும் பாரம்பரிய கலை ஆகிய மூன்று பிரிவுகளில் இந்த விருதுகளை வழங்கியதற்காக சாஸ்த்ரா சத்சங்கத்தை பெரிதும் பாராட்டினார்.

இந்த மூன்று துறைகளும் இந்திய கலை மற்றும் பண்பாட்டுடன் பெரிதும் தொடர்புடையன என்றார். இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் பெறப்பட்டு  விருதுபெற்ற விஜய் சிவாவால் அறிவிக்கப்பட்டன.

விருதுகளை பெற்ற மூவரும் தியாகராஜ சுவாமிகளின் 175வது ஆராதனை நாளில் இந்த விருதை பெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர். சாஸ்த்ரா சத்சங்கம் ‘கிரேஸ் ஆப் ராய்ஸ்’ என்ற புகழ்பெற்ற கலைஞர்கள் பாடிய இசைவடிவிலான ஆதித்ய ஹிருதயம் இசை ஆல்பத்தை வெளியிட்டது. இந்த ஆல்பம் சாஸ்த்ரா சத்சங்க யுடியூபிலும், அதன் இணையதளத்திலும் கிடைக்கும்.

Related Stories: